மாரி செல்வராஜ்:
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மூலம் சமூக அவலங்களை சாட்டையடி திரைக்கதை மற்றும் வசனங்கள், பாடல்களோடு மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த இரண்டு படங்களுமே வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து என்ன மாதிரி கதைக்களத்தில் படம் இயக்க போகிறார் என ஆவலோடு இருந்த போது ஒரு அறிவிப்பு வந்தது.
நடிகர்கள் யார் :
உதயநிதி, வைகைப்புயல் வடிவேலு, லால், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் போன்ற பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் பணியாற்றி உள்ளார்கள். அதே போல வழக்கமாக வடிவேலுவை காமெடி ரோல்களில் பார்த்தவர்களுக்கு இந்த படம் ஒரு ஃப்ரெஷ் கன்டன்ட் ஆகவே இருக்கும். ஏ ஆர் ரஹ்மான் முதல் முறையாக மாரி செல்வராஜ் உடன் கூட்டணி அமைத்து, பாடல்களும் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
படத்தின் நாட்:
2008-ம் ஆண்டு சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் வெடித்தது. இந்தியளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிரெய்லர் வெளியீடு:
சத்தமே இல்லாமல் நேற்று மாலை “மாமன்னன்” டிரெய்லர் வெளியாகி ஒரே நாளில் பல லட்சம் பேரை பர்க்க வைத்து பெரும் கவனத்தை ஈர்த்து உள்ளது. இப்படம் வரும் 29 அன்று திரைக்கு வர உள்ளது.
டிரெய்லர் : https://youtube.com/watch?v=xWe03YByWEI&feature=share9