தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் விடுதலைப் சிறுத்தைகள் கட்சியின் மண்டல கூட்டம் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழக முதல்வர் 5000 கோடி கேட்டார் ஆனால் ஒன்றிய அரசு வெறும் ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்திய ஒன்றிய அரசையோ பிரதமரையோ வலியுறுத்தி ஐயாயிரம் கோடி பெற்றுத்தர ஆதரவு தர வேண்டும். அவ்வாறு ஒன்றிய அரசு ஒத்துழைத்தால் இன்னும் கூடுதலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக இருக்கும் என்றார். வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் என்றால் வெளியிடலாம்.
என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டிருக்கிறது என பொதுமக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியமானது தான் என்றும் அவர் தெரிவித்தார்.