Mnadu News

வேலைக்காக நிலம் வழக்கு: அமலாக்க துறை விசாரணைக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜர்.

கடந்த 2004-2009 காலகட்டத்தில் ரயில்வேயில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதற்கு பிரதிபலனாக லாலு பிரசாத் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் அவர்களது நிலங்களை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், ராப்ரிதேவி, இளைய மகனும், துணை முதல்-அமைச்சருமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதையடுத்து, இந்த வழக்கில் இந்த மாத தொடக்கத்தில், தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்க துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள அமலாக்க துறை தலைமையத்தில், தேஜஸ்வி யாதவ் வேலைக்கு நிலம் வழங்கிய வழக்கின் விசாரணைக்காக் அதிகாரிகளின் முன் நேரில் ஆஜகி விளக்கம் அளித்துள்ளர்.

Share this post with your friends