ஜெர்மனியின் பெர்லினில் அறிவுத்திறன் குறைந்தவர்களுக்காக ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக விளையாட்டின் 16 வது சீசன் நடந்தது. ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் முதன் முறையாக 202 பதக்கம் கைப்பற்றி, இந்தியா புதிய வரலாறு படைத்தது. இந்நிலையில் விளையாட்டு போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 202 பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ,பெர்லினில் நடைபெற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக் கோடைகால விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 76 தங்கப் பதக்கங்கள் உட்பட 202 பதக்கங்களை வென்ற நமது விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள். விளையாட்டு வீரர்களின் விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More