Mnadu News

10 சதவீத இடஒதுக்கீடு எதிரான தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க முதல் அமைச்சர்; மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், பாமகவின் பாலு, வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது,10 சதவீத இடஒதுக்கீட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தேசிய அளவில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அரசின் தீர்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
சமூக நீதியை நிலைநாட்டும் தமிழக அரசின் கொள்கை முடிவுகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்கும், தேசிய கண்ணோட்டத்தில், காங்கிரஸ் பார்வை வேறாக இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Share this post with your friends