10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,ஜூன் 27 ஆம் தேதி மொழிப்பாடமும். ஜூன் 28 ஆம் தேதி ஆங்கிலமும். ஜூன் 30 ஆம் தேதி கணிதமும். ஜூலை 1ஆம் தேதி விருப்பத்தேர்வு மொழிபடமும். ஜூலை 3 ஆம் தேதி அறிவியலும் ஜூலை 4 ஆம் தேதி சமூக அறிவியலும் நடைபெறுகிறது.இந்த 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு வரும் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு மே 24 முதல் 27-ஆம் தேதி வரையும் விண்ணபிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதே சமயம், இந்த துணை தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களின் பள்ளிகள் தேர்வு மையத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More