Mnadu News

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் சென்னையில் நடந்த தி.மு.க. பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.இதனால் தி.மு.க தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Share this post with your friends