உலகின் மிக நீளமான விஷப்பாம்பு என்ற பெயரினைக் கொண்டது ராஜநாகம். ஒடிசா மாநிலத்தின் மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள கலிமேலா என்ற பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட கிராமத்தினர் பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு பயத்துடன் பாம்பு பிடிப்பவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த பாம்பு பிடிக்கும் குழுவினர் லாவகமாக ராஜநாகத்தைப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு 11 அடி நீளமும், 25 கிலோ எடையுடன் இருந்ததாக பாம்பினைப் பிடித்தவர்கள் தெரிவித்தனர். பிடிக்கப்பட்ட ராஜநாகம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.