நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பணம் பட்டுவாடா நடைபெற வாய்ப்பு இருப்பதால் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் வருமான வரித்துறையினர் சென்னை நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 இடங்களில் கடந்த 3 நாட்களாக பி.எஸ் .கே நிறுவனத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர் .
சோதனையின் போது பி.எஸ் .கே நிறுவனத்தில் 112 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரி சோதனையிலிருந்து தகவல்கள் வெளியாகியது .மொத்தமாக 14 .8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரி அறிவித்துள்ளார்.இந்நிலையில் தற்காலிகமாக சோதனை முடக்கிவைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் .