இந்திய முழுவதும் பொதுமக்களுக்கு ஏதும் இடையூறு அல்லது உடல்நலம் பிரச்னை மற்றும் விபத்து பிரச்சனைகள் என்றால் ஒவொன்றுக்கும் தனி தனி எண்கள் நடைமுறைப்படுத்தி அதை நீண்ட நாளாக மக்கள் பயன்படுத்தி வந்தனர் .
அந்த எண்கள் :
போலீஸ் (100), தீய ணைப்பு (101), பெண்கள் பாதுகாப்பு (1090 ) ஆம்புலன்ஸ் (108 )போன்ற பல எண்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன .
வெளிநாடுகளில் இந்த மாதிரியான தனி தனி எண்கள் கிடையாது அணைத்து அவசரகால நிலைமையிலும் ஒரே எண்கள் தான் பயன்படுத்துவார்கள் .அமெரிக்காவில் அனைத்து அவசர கால தேவைக்கும் 911 என்ற ஒரே எண் பயன்பாட்டில் உள்ளது போல் நம்
நாட்டிலும் ஒரே எண் மட்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் அவரசரகால தேவைக்கு 112 என்ற ஒரே எண்ணை மட்டும் பயன்படுத்துவதற்கான சேவை தொடங்கியுள்ளது. இதுவரை 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்கள் இதில் இணைந்துள்ளன.இந்த திட்டம் மத்திய அரசின் நிர்பயா நிதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது .இதற்கென ஒரு தனி பிரிவும் இந்திய அரசு நியமித்துள்ளளது .