தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா பேரவையில் கடந்த ஏப். 21-ஆம் தேதி கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இது தொடர்பாக கடந்த ஏப். 24-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கத்தினருடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அன்றைய தினமே முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மே தின நிகழ்ச்சியில் அவர்அறிவித்தார். இந்நிலையில், சட்ட மசோதாவை திரும்பப் பெற்றதாக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More