தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், தொழிலாளர்களின் அதிகபட்ச பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 நேரமாக மாற்றும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்து, சட்டப்பேரவையில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.ஆனால், இந்த சட்ட மசோதாவை திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக உள்ளிட்டவையும் கடுமையாக எதிர்த்தது. இந்த சூழலில்,சட்ட மசோதா குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கணேசன், எந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் கொண்டு வரப்படும். 12 மணி நேரம் வேலை என்பதை தொழிலாளர்களும், தொழிற்சாலைகளும் தேர்வு செய்து கொள்ளலாம். தொழிற்சாலைகளுக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மை வேண்டும் என்பதற்காக இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. என்று அமைச்சர் கணேசன் கூறி உள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More