Mnadu News

15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல்: சென்னை மாநகராட்சி தகவல்.

சென்னை மாநகராட்சியில், 2023 – 24-ம் நிதியாண்டில் 1,680 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பாக, முதல் 15 நாட்களில் மட்டும் ரூ.300 கோடி வசூல் செய்ய திட்டமிட்டு இருந்தது. இதற்காக, வார இறுதி நாட்களில் 170 இடங்களில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதன்படி 15-ம் தேதி மாலை வரை ரூ.275 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.சொத்து வரி வசூல் குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள்;, சென்னை மாநகராட்சியில், நடப்பு நிதியாண்டின் அரையாண்டில், முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தினால் சலுகை கிடைக்கும். அதன்படி, பொதுமக்கள் ஆர்வத்துடன் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். 15-ஆம் தேதி மாலை வரை 275 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட தொகை வசூல் ஆக வாய்ப்பு உள்ளது. தற்போது வரை 6 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறி உள்ளனர்.

Share this post with your friends