சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் உரிமையாளர் வெங்கடேசனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி மனைவிகள் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் மகன், தாய்,அக்கா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் வாடகை வீட்டில் இருந்த சிறுமியை மிரட்டி வெங்கடேசன் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வெங்கடேசனின் அக்கா லலிதா தனது ஆண் நண்பர்கள் மூவரிடம் 3,500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வயிற்று வலியால் துடித்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டபோது சிறுமி 4 மாதம் கர்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் தாயார் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளான வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன்,அவரது தாய் விஜயா,அக்கா லலிதா, லலிதாவின் ஆண் நண்பர் வெங்கப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் தலைமறைவாக உள்ள கிரி, பாலாஜி ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட தாய்,மகன்,அக்கா உள்பட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More