மகாபுலிபுரம் அருகே பட்டிபுலத்தில் உள்ள சொகுசுவிடுதியில், மது மற்றும் போதை விருந்து நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து , 100க்கும் மேற்பட்ட காவலர்கள், சொகுசு விடுதியை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றதும், அதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 160 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களின் உடைமைகள், கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஐடி ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பின்னர் கைது செய்த நபர்களை அவர்காது பெற்றோர்களை வரச்சொல்லி ஒப்படைக்கலாம் என்ன போலீசார் முடிவு செய்துள்ளனர்.