Mnadu News

19 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு அனுமதி.

தமிழகத்தில் மழை காரணமாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் தமிழகத்தில் அண்மையில் நேரில் ஆய்வு செய்தனர். அதே நேரம், விவசாயிகளின் கவலையைப் போக்கும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உணவுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி இருந்தார்.அதோடு, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும், மத்திய உணவுத் துறைச் செயலாளரைச் சந்தித்து 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கும்படி கோரியிருந்தார். இந்நிலையில், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19 சதவீத ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Share this post with your friends