Mnadu News

2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: முதல் அமைச்சர் தொடக்கி வைத்தார்.

சென்னையில் 118 புள்ளி 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித் தடங்களில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் 76 புள்ளி 3 கிலோ மீட்டருக்கு உயர்மட்டத்திலும், 42 புள்ளி 6 கிலோ மீட்டருக்கு நிலத்தடியிலும் பாதை அமைக்கப்படுகிறது.இந் நிலையில், மாதவரம் – சிறுசேரி இடையேயான 45 புள்ளி 8 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட தடம் அமைக்க மாதவரம் பால் பண்ணை அருகே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

Share this post with your friends