தர்மராஜ் என்பவருக்கு சொந்தமான அந்தக் கடைக்கு வந்த 2 பெண்கள் பொருட்கள் வாங்குவது போல் பாவனை செய்து ஊழியர்கள் அசந்த நேரத்தில் பொருட்களை புடவைக்குள் வைத்து பதுக்கி கொண்டு அங்கிருந்து சென்றனர்.அவர்களது வித்தியாசமான நடையைப் பார்த்து சந்தேகம் அடைந்த கடையின் பெண் ஊழியர்கள் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்த போது கடை பொருட்களை திருடியது தெரிய வந்தது.புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த கோமதி மற்றும் சுகந்தி என்பது தெரிய வந்தது.பொருட்களை திருடுவதற்காகவே, புடவையை பிரத்யேகமாக வடிவமைத்ததும், பை போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், மறைத்து வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More