தமிழகத்தில் சென்னை மாநகராட்சியை தவிர, 20 மாநகராட்சிகளில் 3ஆயிரத்து 417 புதிய பணியிடங்கள் உருவாக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்போது, மாநகராட்சிகளில் தோற்றுவிக்கப்படாத நகராட்சி பணியிடங்களை மாநகராட்சி பணியிடங்களுக்கு இணையாக எவ்வாறு பொருத்துவது என்பது குறித்தும், பொது அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிகளில் வார்டு அலுவலகம் அமைத்தல், மைய அலுவலகங்களை மறுசீரமைத்தல் தொடர்பான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதோடு,; ஒவ்வொரு மாநகராட்சியும் பின.வரும் நான்கு பிரிவுகளைக் கொண்டு இயங்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைக்கவும் மற்றும் முறைப்படுத்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More