மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முன்தினம் முதல் அறிவிக்கப்படுகின்றன. இரண்டாம் நாளான நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு ,அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டால் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More