Mnadu News

2022 மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ என்பவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

Share this post with your friends