Mnadu News

2024 தேர்தல்: கார்கே தலைமையில் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு.

வரும் மக்களவை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் கூடவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தக் குழு கூடுகிறது. தேர்தல் உத்தி குழுவின் உறுப்பினர்கள் தலைவர் கார்கேவிடம் செயற் குழுவின் பணிகள் மற்றும் 2024 தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும். இந்த செயற்குழுவில் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால், அஜய் மாக்கென், ரன்தீப் சூரஜ்வாலா, பிரியங்கா காந்தி வத்ரா, சுனில் கனுகோலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Share this post with your friends