Mnadu News

ஹாட்….. Entertainment ….. பரபரப்பு…. கோடை ஸ்பெஷல்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையை பெரிதும் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பார்கள் அவர்கள் கோடை விடுமுறைக்கு என்ன  செய்யலாம் என்று பெரிய பட்டியல் போட்டு வைத்து இருப்பார்கள். அதில் முக்கியமான ஒன்று அவர்கள் பார்க்கக் காத்துகொண்டு இருக்கும் சில படங்கள் பற்றியும் அது எப்போது வெளியாகும் என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்

ஷாசம்:

சிறுவர்களில் இருந்து இளைஞர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சூப்பர் ஹீரோ ஜானரில் வெளியாக இருக்கும் டிசியின் அடுத்த படம் , இவர்களின் ஆக்குவாமேன் வெற்றி கொடுத்த உத்வேகத்துடன் அனைவரும் இந்த படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். ஒரு சிறுவனுக்கு திடீர் என சூப்பர் மேனுக்கு இணையான சக்தி கிடைக்க அதை வைத்து வரும் பிரச்சனைகளையும், சூப்பர் வில்லன்களையும் எப்படி துவம்சம் செய்கிறான் என்கிற பல சிறுவர்களின் கனவை காட்டி இருக்கும் படமே ஷாசம். இதை டிசி ரசிகர்கள் மட்டுமல்லாமல் சூப்பர் ஹீரோ ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். இப்படம் இந்தியாவில் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகிறது

அவென்ஜர்ஸ் எண்ட்கேம் :

உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த அவென்ஜர்ஸ் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். போன வருடம் வெளியான இதன் முந்தைய பாகமான அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் படம் பெரும் வெற்றியைப் பெற்று வசூல் சாதனையும் புரிந்தது. அவென்ஜ்ர்ஸ் பட வரிசையில் அதில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கும் அயன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரங்களுக்கு இதுவே கடைசி படம் என்பதாலும் இதனை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர் . இப்படம் இந்தியாவில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகிறது

ஜான் விக் 3 :

ஜான் விக் படங்கள் வரிசையில் மூன்றாம் பாகமாக வரவிருக்கும் இந்த படத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு தன் நாயை கொன்றதற்காக ஒரு மாபியா கும்பலையே பழிவாங்கும் முன்னாள் மாபியா ஒருவனின் கதை தான் இது. இதன் ஒற்றை வரி கேட்க வேடிக்கையாக இருக்கலாம் ஆனால், படம் பார்க்கும் போது விறு விறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும். அதன் மூன்றாம் பாகம் என்பதால் ஒரு வித எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருக்கத்தான் செய்கிறது . இதன் இரண்டாம் பாகம் ரசிகர்கள் நினைத்த அளவிற்கு அவர்களை கவரவில்லை. அதனால் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். மே 17 ஜான் விக் 3 இந்தியாவில் வெளியாகிறது

கேம் ஆப் த்ரோன்ஸ் :

சீரிஸ் ரசிகர்களின் லிஸ்டில் கண்டிப்பாக இருக்கும் ஒரு முக்கிய சீரிஸ் இது. பிரம்மாண்ட படங்களுக்கு இணையான பொருள் செலவில் எடுக்கப்படுகிறது. இந்த சீரிஸ், எந்த கதாபாத்திரம் எப்போது இறக்கும், ஒரு வேலை நமக்கு பிடித்த கதாபாத்திரம் இறந்து விடுமோ என்ற பதற்றமும் வரலாற்று கதை, டிராகன், white walkers என்று அழைக்கப்படும் பனி அரக்கர்கள் என இந்த சீரிஸ் விறு விறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் இதன் கடைசி சீசன் இது என்பதாலும், அந்த அரியணையில் யார் உட்காரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புமே அனைவரின் மண்டைக்குள் ஓடிக்கொண்டு இருக்கும் கேள்வியாக இருக்கிறது. அதை தெரிந்துகொள்ள இதை ஆவலோடு எதிர் பார்த்து கொண்டிருக்கின்றன சீரிஸ் பிரீக்குகள் இது ஏப்ரல் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது

நட்பே துணை :

மீசையமுறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கும் படம் அந்த படம் எப்படி இளைஞர்களை கவர்ந்ததோ அதே போல் இந்த படமும் நிச்சயம் இளைஞர்களை கவரும் என எதிர்பார்க்கபடுகிறது. இதில் இருந்து வெளியான அத்தனை பாடல்கள் மற்றும் ட்ரைலர் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியதால் இதை காண பலரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர் .  நட்பே துணை வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சூப்பர் டீலக்ஸ்:

 

தியாகராஜா குமாரராஜா பத்து வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதி , சமந்தா , பஹத் பாசில், மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். இதன் ட்ரைலர் அதில் விஜய்சேதுபதி தோற்றம் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தை பல சினிமா ரசிகர்களும் எப்போது வெளியாகும் என எதிர்பாத்துள்ளனர். 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது .

மேலும் என்னை நோக்கி பாயும் தோட்டா, கீ , NGK , காஞ்சனா 3 , தேவி 2 , சிவகார்த்திகேயனின்   Mr லோக்கல் என பலப்படங்கள் இந்த கோடை விடுமுறையை குறிவைத்து வெளிவர இருக்கிறது

இது மட்டுமல்லாது ஐ.பி.எல் போட்டிகள், தேர்தல் என்ன இந்த கோடை மிகவும் சூடாகவும் , நல்ல என்டர்டைன்மெண்டாகவும் கழியும் என தெரிகிறது

முக்கிய குறிப்பு : 18 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்

Share this post with your friends