Mnadu News

ஒரு பாடல் ஓவர்…அடுத்து வெளிநாடுதான் விஜய் 63 அப்டேட்

விஜய் 63 படம் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்க்கும் படமாக இருக்கிறது . அதற்கு காரணம்   இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்னர் வந்த தெறி, மெர்சல் மாபெரும் வெற்றி பெற்றதாலும் , தற்போது இந்த படத்தில் விஜய் ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இதற்கு முன்னர் எடுத்த படங்கள் பெரிதும் வெற்றிபெற்றாலும் கதை வேறொரு படங்களின் சாயலில் இருந்ததால் விமர்சிக்கப்பட்டார் அட்லீ. அதனால், இந்த படத்தின் கதைக்காக நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டு தயார் செய்தார் . இப்போது படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்க அதன் கதை எப்படி இருக்க போகிறது என்ற செய்தி பரவி வருகிறது.

 

 

இப்படம் விளையாட்டில் உள்ள அரசியலை பற்றி பேசப்போகிறது. இப்படத்தில்விஜயும் கதிரும் நண்பர்களாக நடிக்கிறார்கள். அவர்கள் கால்பந்து விளையாட்டில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பின் கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். அதன், பிறகு ஒரு கட்டத்தில் கதிர் கொலைசெய்யப்பட அவர் பயிற்சி கொடுத்த அணிக்கு விஜய் பயிற்சியாளராக வந்து அந்த அணியை கதிர் நினைத்த இடத்திற்கு கொண்டு போனாரா, கதிரின் இறப்பிற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களை பழிவாங்கினாரா என்பதே கதை . இதில் நயன்தாரா விஜயின் முன்னாள் காதலியாக அவரை கலாட்டா செய்யும் துறுதுறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .

 

 

எப்போதும் இரண்டு ஹீரோயின்கள் பார்முலாவில் களமிறங்கும் அட்லீ இந்த முறை இரண்டு வில்லன்களுடன் களமிறங்குகிறார். ஒரு வில்லனாக விஜயுடன் பைரவாவில் மோதிய டேனியல் பாலாஜி நடிக்கிறார் மற்றொரு வில்லன் தேர்வு நடந்து வருகிறது .

இந்த படத்திற்காக ஏ.ஆர். ரகுமான் ஒரு பாடலை முடித்து கொடுக்க அதையும் எடுத்து முடித்து விட்டார் இயக்குனர் அட்லீ. அதுமட்டுமல்லாமல் காதல் காட்சிகளும் , யோகிபாபு இடம் பெரும் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

சென்னையில் உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் கிளைமாக்ஸ் கட்சி எடுப்பதற்க்கான செட் வேலைகள் ஆறு கோடி செலவில் நடந்து வருகிறது. முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டுள்ளார். அனைத்து காட்சிகளையும் ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறார் அட்லீ. பின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் தொடங்க இருக்கிறது. படத்தை திட்டமிட்டது போல் தீபாவளிக்கு வெளியிட அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்கவும் திட்டமிட்டுள்ளார் அட்லீ

 

போன முறை இவர்கள் கூட்டணியில் வந்த மெர்சல் பெரும் சர்ச்சைகளில் சிக்கி விஜயின் பெயர் ஜோசப் விஜயாக இருப்பதனால்தான் அவர் இப்படி வசனம் பேசியிருக்கிறார் என குற்றச்சாட்டுகள் வைத்தனர் சிலர். இம்முறை மைக்கல் என்ற பெயருடனே களமிறங்குவதாலும் , நிச்சயம் அரசியல் பேச போவதாலும் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு எந்த பாதகமும் வராது என தெரிகிறது .

Share this post with your friends