Mnadu News

24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மற்றும் ஒடிசாவிலும் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பருவமழை தொடக்கம் காரணமாக, நவம்பர் மாதம் 1, 2 தேதிகளில் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் நெல்லூர் முதல் கடலூர் வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends