Mnadu News

26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை மையம் தகவல்!

கேரளாவின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் பல இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு,சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends