Mnadu News

3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து மகளிர் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. லண்டன், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More