அரசியலமைப்பு சாசனம் கலங்கரை விளக்கம்போல் செயல்பட்டு நமக்கு வழிகாட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, தவறான பாதையில் மக்களை வழிநடத்தும் அரசியல் முறியடிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 3வது முறை ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடைந்ததாக மாறும். சுயசார்பு நாடாக மாறும். நாடு உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரத்தில் இருந்து 3வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலைக்கு முன்னேறும் என்று தெரிவித்தார்.