ரிக்டர் அளவுகோளில் 7.6 எனும் அளவில் வட மத்திய ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி நிறுவனம், இஷிகாவா, நிகாடா மற்றும் டொயாமா ஆகிய கடற்கரையோர பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஷிகாவாவை மையமாக கொண்டு உருவான தொடர் நில அதிர்வுகளால் கடல் அலைகள் 16.5 அடி வரை உயரும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
அணுமின் நிலையங்களில் உள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹொகுரிகு மின் உற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.