நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரனை ஆதரித்தது உட்பட காரணங்களுக்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் பதிலளிக்குமாறு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவதற்காக திமுகவினர் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் சபாநாயகர் 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இது அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் திங்கள் கிழமை வழக்கை விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.