தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்ததாக 3 எம்.எல்.ஏக்கள் மீது அதிமுக கொறடா சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் சம்மந்தப்பட்ட 3 பேருக்கும் விளக்கமளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் 3 பேரின் தகுதி நீக்கத்திற்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபாநாயகரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு விளக்கம் அளிக்கக் கோரியும் உத்திரவிட்டுள்ளது.