கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் . கோவையை அடுத்த கீரை நத்தம் கிராமத்தில் வெண் பன்றி வளர்க்கும் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் ஒவ்வொரு ஒருவராக மயங்கி கழிவுநீர் தொட்டியில் விழுந்தனர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.