கடந்த சில நாட்களாக மும்பை முழுவதும் பலத்த மழையால் மூழ்கியது மக்கள் இயற்கை சீராகி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் இந்த சமயத்தில் தற்போது ஒரு 3 வயது குழந்தை அங்கு திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்து பரிதமாக உயிரிழந்துள்ளது .
கனமழையால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்து அங்கு பாதாள சாக்கடைகள் திறந்துகிடப்பதால் முழங்கால் அளவு நீரில் நடந்து செல்லும் மக்களுக்கு பெரும் ஆபத்தாக சூழ்நிலை உருவாகியுள்ளது .
இந்நிலையில் மூன்று வயது குழந்தை ஒன்று கோரேகாவ் பகுதியில் சாலையில் நடந்து செல்லும் போது பாதாள சாக்கடைக்குள் விழுந்துவிட்டதாக தகவல் வெளியாயினது பொதுமக்கள் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர் பல மணிநேரமாக போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.
இந்த சம்பவத்தால் இறந்த குழந்தையின் பெற்றோரும் பொதுமக்களும் பாதாள சாக்கடையை மூடவலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர் .