Mnadu News

32 பேர் வீடியோ காலில் பேசலாம்: Whatsapp புதிய அப்டேட்

இனி குரூப் வீடியோ காலில் 32 பேர் இணையலாம். ஆப்பிள் நிறுவனத்தின் Facetime செயலுக்கு இணையாக மாற்றியுள்ள Whatsapp செயலி.

இந்தியாவில் மட்டும் 390 மில்லியன் Whatsapp பயனாளிகள் உள்ளனர். உலகம் முழுவதும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் Whatsapp செயலியில் இனி புதிய வசதியாக வீடியோ காலிங் செய்ய லிங்க் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Meta நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் (Mark Zuckerberg) தனது பேஸ்புக் (Facebook) பதிவில் வாட்ஸ்ஆப் மூலம் இனி ஆடியோ அல்லது வீடியோ காலில்இணைய லிங்க் (Link) வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் 32 பேர் வரை லிங்க்கை கிளிக் செய்து பேசமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

இவை அனைத்திலும் மிக முக்கிய விஷயமாக குரூப் வீடியோ காலில் இனி 32 பேர் வரை இணையலாம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னாள் வெறும் 8 பேர் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்தமுடியும்.

இந்த வசதி விரைவில் வெளியானதும் இனி பயனாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி ஆடியோ அல்லது வீடியோ காலிங் செய்யமுடியும். இதில் கூடுதல் வசதி என்னவென்றால் இந்த லிங்க்கை மற்ற பிளேட்போர்மில் (Platform) ஷேர் செய்து அதன் மூலமும் இணையலாம்.

இதில் End to End Encrypted Call எனும் முறையில் இந்த வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இது எப்போது உபயோகத்திற்கு வரும் என்று இன்னும் குறிப்பிடப்படுவதில்லை.

புதிய வசதிகள் Whatsapp செயலியை ஆப்பிள் நிறுவனத்தின் Facetime செயலுக்கு இணையாக மாற்றியுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தும் நேரம் 32 பேருக்கு அதிகமானோர் இணைந்தால் இந்த வீடியோ கால் வசதியை தொடங்கியவர் இந்த இணைப்பில் யார் இருக்கவேண்டும் யார் இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த மத தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் செயலியில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. தேதி வாரியாக மெசேஜ் அறிவது, ஆன்லைன் ஸ்டேட்டஸ் மறைப்பது மெசேஜ் எடிட் செய்வது போன்ற வசதிகளை வெளியிட்டது. இந்த வசதிகள் விரைவில் பயனாளர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More