Mnadu News

32 மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை – சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, 7.45 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணி, 10 மணிக்கும், மதியம் 3.50 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், மாலை 6.35 மணிக்கும், இரவு 8.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கூடூர்-சூலூர்பேட்டை இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

Share this post with your friends