காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் நேற்று மாலை வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அது இன்று காலை வினாடிக்கு 15 ஆயிரத்து 200 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 750 கன அடியிலிருந்து வினாடிக்கு 200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாக உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More