தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல இயக்குனர்களில் உச்சத்தில் இருப்பவர் இயக்குனர் மணிரத்தினம் .இந்தியா முழுவதும் மணிரத்தினம் அவர்களின் படம் வெளிவருகிறது என்றால் அந்த படத்தை காண அனைவரும் ஆவலோடு இருப்பார்கள் .இவரது கதையின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.செக்க சிவந்த வானம் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .
இந்நிலையில் இவரது அடுத்த படைப்பாக பிரபல நாவலான பொன்னியின் செல்வன் என்ற நாவலை படமாக எடுக்க உள்ளார்.இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கஇருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது .
அந்த வரிசையில் மற்றொரு பிரபலமும் இணையவுள்ளார் .திட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பின் நடிகர் சத்யராஜ் அவர்கள் இந்த படத்தில் மணிரத்தினம் உடன் இணையவுள்ளார் . இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்த படம் 34 வருடங்களுக்கு முன் வெளிவந்த பகல் நிலவு என்ற படம் குறிப்பிடத்தக்கது .