சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டபிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சி மாற்றத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்பதால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த 4 தொகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க பறக்கும் படையினர் அதிதீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அப்போது மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் சென்னையிலிருந்து மதுரைக்கு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 3.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More