Mnadu News

370 வது சட்டப்பிரிவு ரத்தாகியும்படுகொலைகள்:யார் காரணம்? வினவும் ஃபரூக் அப்துல்லா.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஜம்முவில் உள்ள ஃபரூக் அப்துல்லாவின் வீட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை ஃபரூக் அப்துல்லா சந்தித்தார். அப்போது, புரான் கிரிஷன் பட் என்ற காஷ்மிரி பண்டிட் கடந்த சனிக்கிழமை சோபியான் என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, “நீதி வழங்கப்படும் வரை இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியாது. இதற்கு முன் படுகொலைகள் நிகழ்ந்தபோது சட்டப்பிரிவு 370 தான் காரணம் என கூறினார்கள். தற்போது அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், இதுபோன்ற கொலைகளை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? யார் இதற்குக் காரணம்?” என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Share this post with your friends