நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வந்தே பாரத் விரைவு ரயிலின் 3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்நிலையில், 4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஹிமாசல பிரதேச முதல் அமைச்சர்; ஜெய்ராம் தாக்கூர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆக்கியோர் கலந்துகொண்டனர். வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கிவைக்கப்பட்டுள்ள குஜாரத், ஹிமாசல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்கள் நிகழாண்டு இறுதியில் சட்டபேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
.
.