மே 19-ந்தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 4 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பொறுப்பாளர்களாக- துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோரை திமுகத் தலைமை அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் கிழக்கு- மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ.,
திருப்பரங்குன்றம் மேற்கிற்கு- தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம், திருப்பரங்குன்றம் தெற்கு பகுதிக்கு விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ, திருப்பரங்குன்றம் வடக்கு பகுதிக்கு மதுரை மாநகர மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி ஆகியோரை அறிவித்துள்ளது.
அவனியாபுரம் கிழக்கு பகுதிக்கு சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்ஏ.அவனியாபுரம் மேற்கு பகுதிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மேலும் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகர், ஜெ.அன்பழகன், கே.எஸ்.மஸ்தான், ஆண்டி அம்பலம், இன்பசேகரன், ஈஸ்வரன், வசந்தம் கார்த்திகேயன், கோவி.செழியன் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன், முத்துராமலிங்கம், ஆவடி சா.மு.நாசர், நிவேதா முருகன் ஆகியோரை தேர்தல் பொறுப்பாளராக அறிவித்துள்ளது.