தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த 18-ந் தேதி வேலூர் தொகுதி நீங்கலாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது.
ஆனால் இந்தத் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில் சட்டச் சிக்கல் இருந்ததால் 4 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் மே 19ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சூலூர் தொகுதியில் கே.சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது, ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தரராஜ் ஆகியோர் போட்டியிடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.