Mnadu News

400 கோடிகளை தாண்டிய ஜெயிலர்! வசூல் பட்டியலில் இந்திய அளவில் மூன்றாவது இடம்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷராப், விநாயகன் என பல மொழி ஸ்டார் நடிகர்களின் கூட்டாக இப்படம் பான் இந்தியா ரசிகர்கள் அனைவருமே கொண்டாடும் வகையில் அதன் ரிசல்ட் அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் ஸ்டார் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம்.

‘ஜெயிலர்’ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிசில் 400 கோடியைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஜெயிலர்’ திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையிலும் வரவேற்பு குறையவில்லை.

நேற்று மட்டும் இந்தியா முழுவதும் ‘ஜெயிலர்’  15 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இது ஒரு வார நாளில் மிக அதிகம். கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலையும் இப்படம் ஏழு நாட்களில் முறியடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் 225.65 கோடி வசூலித்து உள்ளது.

மேலும் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் எந்திரன் 2.0, பொன்னியின் செல்வன் 1 ஆகிய படங்களுக்கு அடுத்த படியாக 3வது இடத்தில் ஜெயிலர் திரைப்படம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Share this post with your friends