தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் ஆன்லைனில் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 42 சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், இதுவரை 46,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.