அலைபேசி பயன்படுத்தும் அனைவருக்குமே இன்று இணைய சேவை முற்றிலும் முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது என்று சொல்ல வேண்டும். தற்போது, 4 ஜி பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு இன்னும் இணையத்தின் வேகம் தேவைப்படுவதால் அதை தர பல
தொலைதொடர்புச் சேவை நிறுவனங்கள் தங்களை ஆயத்தம் ஆக்கி வருகின்றன.
இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ‘5ஜி’ என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டில் 5 ஜி சேவையை துவக்கி வைத்தார். அதனால், 3ஜி, 4ஜி, ஸ்மார்ட்போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது. 3ஜி, 4ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என வெளியான இந்த தகவல் வதந்தி என்றும் இதற்கு மறுப்பு தெரிவித்து, மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
டெல்லியில் மத்திய தொலை தொடர்பு செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றேனர். இதில், 5 ஜி அதிவேக இணையதள சேவைக்காக மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.