Mnadu News

5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 46 முதல் 60 கிலோ மீட்டர் வரையில் காற்றின் வேகம் அதிகளவில் இருக்கும் என்பதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்திருந்தனர். ,இந்நிலையில், வங்கக் கடலில் காற்றின் வேகம் குறைந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் இன்று அனுமதி அளித்தனர். இதனைதொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்லுவதால் அதிகளவில் மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More