கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் சிகோடி நகரில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ள மத்திய பிரதேச முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ராகுல் காந்திக்கு 50 வயது ஆகிவிட்டது. ஆனால், மனதளவில் அவர் இன்னும் 5 வயதுடையவர் போல் இருக்கிறார்.எனெனில், கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய வகையில் மோடி பற்றி பேசினார்.அதற்கு நீதிமன்றம் தற்போது தண்டனை அளித்ததும் அவர் ஓடுகிறார். இதற்கு, பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு கூறுகிறார். என்ன கூற வேண்டும் என்றே அவருக்கு தெரியாது. அதோடு, வாக்குறுதிகளை கொடுக்க அவர் தகுதி வாய்ந்தவரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டி வரும். ஏன் என்றால்,மத்திய பிரதேச சட்டசபை தேர்தலின்போது ராகுல் காந்தி, ஒவ்வொருவரின் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி வழங்கினார். ஆனால், 15 மாத கால காங்கிரஸ் ஆட்சியில் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More