கல்கியின் நாவலை திரைப்படமாக கொண்டு வர எவ்வளவோ நடிகர்கள் முயற்சி செய்து தோற்ற நிலையில், அதை சாத்தியப்படுத்தி இன்று உலக அளவில் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டு சேர்த்து தமிழர்களுக்கு பெருமை தேடி தந்துள்ளார் கிளாசிக் இயக்குநர் “மணிரத்தினம்”.

கடந்த மாத இறுதியில் வெளியாகி தற்போது வரை இப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், 500 கோடி வசூலை இப்படம் நெருங்க உள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது.

அதே போல பொன்னியின் செல்வன் பாகம் இரண்டை ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து மணி ரத்தினதுக்கு ஒரு மாபெரும் தொகை, ஷேர் கொடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
