Mnadu News

“ஜவான்”படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியீடு ! வைரல் !

அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் “ஜவான்”. மாபெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் முக்கிய ரோல்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரியாமணி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

மாஸ் துள்ளும் டிரெய்லரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெண்ட் வெளியிட்டு இருந்தது. அனிருத் ரவிச்சந்திரன் இசையில் மாஸ் ராப் பின்னணி பாடலோடு வெளியான டிரெய்லர் வரவேறப்பை பெற்றது.

இப்படம் செப்டம்பர் 7 அன்று உலகமெங்கும் பான் இந்தியா படமாக வெளியாகும் நிலையில் இன்று படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் போஸ்டரை ஷாருக்கான் இன்று தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் . இது தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மேலும், இதைஷாருக்கான் ரசிகர்கள்டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Share this post with your friends