Mnadu News

தனுஷ் கொடுக்கப்போகும் டபுள் ட்ரீட் ! என்னென்ன தெரியுமா ?

இயக்குனர் சேகர் கம்முலாவின் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் தனுஷ். இந்த படம் D51 என பெயரிடப்பட்டு உள்ளது. தற்போது D51 ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா நடிக்கவிருக்கிறாராம்.

ரஷ்மிகா மந்தனாவும், நாகர்ஜுனாவும் தனுஷ் படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் துவங்க உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் அந்த படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். தனுஷ் தற்போது டி50 படத்தை இயக்கி, நடித்துக் கொண்டிருக்கிறார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில். அந்த படத்தில் சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள் என்பது குறிபிடத் தக்கது. டி50 படத்தின் ஷூட்டிங் சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் செட்டில் நடந்து வருகிறது. அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தன் அண்ணன் செல்வராகவனை நடிக்க வைத்திருக்கிறார் தனுஷ்.

பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் தனுஷ் . அந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது. அது தனுஷ் இயக்கிய முதல் படம் என்று கூற முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. ஜூலை 28ம் தேதி தனுஷ் தன் 40வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அவரின் பிறந்தநாள் பரிசாக “கேப்டன் மில்லர்” படத்தின் டீஸரை வெளியிடவிருக்கிறார்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் மாறுபட்ட ரோலில் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் மீது பயங்கர எதிர்பார்ப்பு உள்ளது.. தனுஷின் பிறந்தநாள் அன்று கேப்டன் மில்லர் டீஸர் மட்டும் வரவில்லை. டி50 படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டரும் வருகிறது. அதனால் தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பதில் சந்தேகமே இல்லை.

Share this post with your friends